Pages

இயற்கையோடு இணைந்து வாழ்வோம்

மனிதன் இயற்கையை ஒட்டி வாழ்ந்து வந்தால் நோய்கள், பிரச்சினைகள் இல்லாத ஆரோக்கிய ஆனந்த வாழ்க்கையை நிச்சய மாகப் பெற முடியும். ஆனால் நாம் இயற்கைக்கு முரண்பட்டு எத்தனையோ காரியங்களைச் செய்கிறோம். அதுதான் பிரச்சினைகளுக்கு ஆணிவேர்.

நமது உடலில் இரத்தம் தூய்மையாக இருக்க, இயற்கை தரும் உணவு தேன். தினமும் ஒரு டம்ளர் வெது வெதுப்பான நீரில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து பருகி வந்தால் ரத்தத்தில் உள்ள குற்றங்கள் நீங்கும்.

உடல் பருமனைக் குறைக்க வேண்டுமானால் முள்ளங்கி அல்லது கேரட்டைத் துருவி மேலாகச் சிறிது தேன் கலந்து, அருந்தி வந்தால் உடலில் தேவையற்ற கொழுப்பு குறைந்து பருமன் குறையும்.

ஜீரணக் கோளாறுகள் உடையவர்கள் காலையில் வெறும் வயிற்றில் வெது வெதுப்பான நீரில் எலுமிச்சம்பழம் பிழிந்து பருகினால் ஜீரணக் கோளாறுகள் சீரடையும். ரத்தமும் சுத்தம் அடையும்.

விரல் நகங்கள் சிதைந்து வலிமை அற்றதாய் இருந்தால், சுண்ணாம்புச் சத்துள்ள உணவு வகைகளை உண்ண வேண்டும். பால் இதற்கு மிகவும் சிறந்த பலன்களை அளிக்கும்.

தலைமுடி நன்கு வளர, கீரைகள், கொத்துமல்லி, கறிவேப்பிலை, பால் பொருட்கள், முருங்கைக்காய் முதலிய வற்றை அதிகமாக உணவில் சேர்த்து வந்தால் முடி செழித்து வளரும். கறி வேப்பிலைச் சாறும் தேங்காய் எண்ணெயும் கலந்து நன்கு காய்ச்சி அந்த எண்ணெயை தலைமுடிக்குப் பயன்படுத்தி வந்தால் முடி கருத்து,செழித்து வளரும்.

தக்காளியைப் பச்சையாகப் பச்சடியாகவோ, சாறாகவோ அருந்தி வந்தால், தோலின் நிறம் கூடும். ரோஜா இதழ்களை தேனில் ஊறுவைத்துத் தயாரிக்கப்படும் குல்கந்து உண்டு வந்தால் தோலின் நிறம் கூடி பளபளப்பு பெறும்.

கேரட் கண்பார்வைக்கு நல்லது என்பது அனைவரும் அறிந்ததே இதனை தினமும் பச்சையாக உண்டு வந்தால் கண்பார்வை கூர்மை பெறும்.

உணவு உண்ணும் நேரங்களில், சிறிது இஞ்சிச் சாறு, எலுமிச்சஞ் சாறு, தேன் இவற்றைக் கலந்து இரண்டு மூன்று தேக்கரண்டி அளவு அருந்தி வந்தால், இரத்தம் தூய்மை அடைந்து, முகப்பருக்கள், மரு,வெண்புள்ளிகள் மறைந்து முகம் தூய்மை பெறும். தக்காளி, ஆரஞ்சு சாத்துக்குடி,அன்னாசி ஆகிய பழங்களில் புத்தம் புது சாறுகள் உடல் ஆரோக்கியத் திற்குப் பெரிதும் உதவும்.

துளசி


துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை,ஆஸ்துமா,இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு. துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி,இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசிக் கஷாயம் கொடுத்தால் போதும்.ஆங்கில மருத்துவத்தில் தரப்படும் ஆன்டிபயாட்டிக்குகள் நல்லதல்ல.


1) வேறு பெயர்கள்: துழாய், திவ்யா, பிரியா, துளவம், மாலலங்கல், விஷ்ணுபிரியா, பிருந்தா, கிருஷ்ணதுளசி, ஸ்ரீதுளசி, ராமதுளசி


2) இனங்கள்: நல்துளசி, கருந்துளசி, செந்துளசி, கல்துளசி, முள்துளசி, நாய்துளசி (கஞ்சாங்கோரை, திருத்துழாய்)


3) தாவரப்பெயர்கள்: Ocimum, Sanctum, Linn Lamiaceae, Labiatae (Family)


4) வளரும் தன்மை: வடிகால் வசதியுள்ள குறுமண் மற்றும் செம்மண், வண்டல்மண், களி கலந்த மணற்பாங்கான இருமண், பாட்டு நிலம் தேவை. கற்பூரமணம் பொருந்திய இலைகளையும் கதிராக வளர்ந்த பூங்கொத்துகளையும் உடைய சிறுசெடி. தமிழகமெங்கும் தானே வளர்கின்றது. துளசியின் தாயகம் இந்தியா. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுக்கும் பரவியுள்ளது. துளசியை விதை மற்றும் இளம் தண்டுக் குச்சிகள் மூலம் பயிர் பெருக்கம் செய்யலாம். மண்ணில் கார அமில நிலை 6.5 - 7.5 வரை இருக்கலாம். வெப்பம் 25 டிகிரி முதல் 35 டிரிகி.


5) பயன் தரும் பாகங்கள்: இலை, தண்டு, பூ, வேர் அனைத்துப் பகுதிகளும் மருத்துவ குணம் வாய்ந்தவை.


6) பயன்கள்: தெய்வீக மூலிகையும், கல்ப மூலிகையும் ஆகும். வீட்டு உபயோகம், மருந்து, வாசமுடைய பூச்சி மருந்துகள், வாசனைப் பொருட்கள். துளசியின் கசாயம் இட்டும், சூரணம் செய்தும் சாப்பிடலாம். இருமல், சளி, ஜலதோசம் மற்றும் தொற்று நீக்கி, கிருமி நாசினி, பல்வேறு வியாதிகளையும், பூச்சிகளையும் கட்டுப்படுத்தும் தடுக்கும் ஆற்றல் படைத்தது. துளசி நம் உடலில் வெப்பத்தை உண்டாக்கி கோழையை அகற்றி உடலின் உள்ளே இருக்கின்ற வெப்பத்தை ஆற்றக்கூடிய தன்மை உடையது. வியர்வையை அதிகமாகப் பெருக்கக் கூடிய குணமும் இதற்கு உண்டு. இது குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல் போக துளசி சாற்றுடன் சிறிது தேன் கலந்து கொடுத்தால் குணமாகும். உடம்பில் ஏற்படுகின்ற கொப்புளங்களுக்கு துளசி இலையை நீர்விட்டு அரைத்து பூசி வந்தால் அவை எளிதில் குணமாகும். சரும நோய்களுக்கு துளசி சாறு ஒரு சிறந்த நிவாரணி.


இலைகளைப் பிட்டவியலாய் அவித்துப் பிழிந்து சாறு 5மி.லி. காலை, மாலை சாப்பிட்டு வர பசியை அதிகரிக்கும். இதயம் கல்லீரல் ஆகியவற்றை பலப்படுத்தும். சளியை அகற்றும், தாய்பாலை மிகுக்கும். இலை கதிர்களுடன் வாட்டி பிழிந்த சாறு காலை மாலை 2 துளி வீதம் காதில் விட்டு வர 10 நாட்களில் காது மந்தம் தீரும். விதைச் சூரணம் 5 அரிசி எடை தாம்பூலத்துடன் கொள்ள தாது கட்டும். மழைக் காலத்தில் துளசி இலையை தேநீர் போலக் காய்ச்சி குடித்து வந்தால் மலேரியா, விஷக்காய்ச்சல் போன்ற நோய்கள் வராது. தொண்டையில் புண் ஏற்பட்டு துன்பப்படுகிறவர்கள் துளசி இலைக் கசாயத்தை குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.


பேன் தொல்லை நீங்க துளசியை இடித்து சாறு எடுத்து அத்துடன் சமஅளவு எலுமிச்சை சாறு கலந்து வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் குளித்து வர பேன், பொடுகு தொல்லை நீங்கும்.


துளசி இலையை இடித்துப் பிழிந்த சாற்றுடன் சிறிதளவு கற்பூரம் கலந்து பல் வலியுள்ள இடத்தில் பூசி வர வலி குறையும். வெட்டுக் காயங்களுக்கு துளசி இலைச் சாற்றை பூசி வந்தால் அவை விரைவில் குணமாகும். வீடுகளில் துளசி இலைக் கொத்துக்களை கட்டி வைத்தாலும், வீட்டைச் சுற்று துளசி செடிகளை வளர்த்தாலும் கொசுக்கள் வராது.


துளசி இலை நல்ல நரம்பு உரமாக்கியாகச் செயல்படுவதோடு, ஞாபக சக்தியையும் வளர்க்கிறது. துளசி மணி மாலை அணிவதால் அதிலிருந்து மின் அதிர்வுகள் ஏற்பட்டு நம்மை பல நோய்களிலிருந்து காக்கிறது. எளிமையான கருத்தடைச் சாதனமாகக் கொள்ளவும் ஏற்றது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் 15 கிராம் அளவு ஆண், பெண் இருவரும் துளசியைச் சாப்பிட்டு வந்தால் ஆறு மாதத்திற்குப் பின் கருத்தரிக்காது.குணமாகும் வியாதிகள்.1.உண்ட விஷத்தை முறிக்க.


2.விஷஜுரம்குணமாக.


3.ஜன்னிவாத ஜுரம் குணமாக.


4.வயிற்றுப்போக்குடன் இரத்தம் போவது நிற்க.


5.காது குத்துவலி குணமாக.


6.காது வலி குணமாக.


7.தலைசுற்றுகுணமாக.


8.பிரசவ வலி குறைய.


9.அம்மை அதிகரிக்காதிருக்க.


10.மூத்திரத் துவாரவலி குணமாக.


11.வண்டுகடி குணமாக.


12.வாத நோயுற்றவர்களின் வயிற்று வலி, வயிற்று உப்பிசம் குணமாக.


13. எந்த வியாதியும் உண்டாகமலிருக்க.


14.தோல் சம்பந்தமான நோய் குணமாக.


15.மின்சாரம் தாக்கியவரைக் காப்பாற்ற.


16.அஜீரணம் குணமாக.


17.கெட்டரத்தம் சுத்தமாக.


18.குஷ்ட நோய் குணமாக.


19.குளிர் காச்சல் குணமாக.


20.மூக்கு சம்பந்தமான வியாதிகள் குணமாக.

தொகுப்புரை

தொகுப்புரை
தமிழ் மருத்துவம் பஞ்சபூதக் கோட்பாட்டு முறையால் வகுக்கப் பட்டுள்ளது.
உலகப் பொருள்கள் அனைத்தும் பஞ்சபூதக் கூறுகளாகக் கண்டறியப்பட்டுள்ளன.
பஞ்சபூதம், நோயை உருவாக்கும் காரணியாகவும், நோயைத் தணிக்கும் மருந்தாகவும், உடலைக் காக்கும் கற்பமாகவும், சாகாக் கலைக்குரிய சித்தியாகவும் அறியப்பட்டிருக்கிறது.
நோய்த் தேர்வு முறைகளும், மருந்து தயாரிப்பு முறைகளும் அறிவியல் முறையாக அமைந்துள்ளன.
அவசர மருத்துவம், நீண்டகால மருத்துவம் என மருத்துவம் வகைப்படுத்தப் பட்டுள்ளன.
உணவுப் பொருள்களே மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றன.
நோய்வரும் வழிகளும், நோயணுகா நெறிகளும் கண்டறியப் பட்டுள்ளன.
தமிழ் மருத்துவம், ஒரு முழுமையான மருத்துவம் என்பதுடன், மிகுந்த பயன்மிகு மருந்துகளையும் கொண்டிருக்கிறது.
தமிழ் மருத்துவம், தமிழர் நாகரிகத்தில் ஓர் அங்கமாக அமைந்துள்ளது.

உயிர்க்கதிரலை

உயிர்க்கதிரலை
வானவெளியில் வீசப்படும் மின்காந்த நுண்ணலைகள் (இணிண்ட்டிஞி ணூச்தூண். ஈணூ. ஏ.ஆர். மில்லிகன் என்பவரால் 1925–ல் கண்டுபிடிக்கப்பட்டது.) விண்மீன்களின் இடையிலிருந்து வருவதாகக் கருதப்படுகிறது.328
அதேபோல், பூமியின் நடுவிலுள்ள நெருப்புக் குழப்பிலிருந்து வீசப்படும் பூகம்பக் கதிர் அலைகள் (குஞிடிஞுணtடிண்tண் டச்திஞு ணணிtடிஞிஞுஞீ tடச்t ச்t ச் ஞீஞுணீtட ணிஞூ ணிணஞு tடணிதண்ச்ணஞீ ஞுடிஞ்டt டதணஞீணூஞுஞீ ட்டிடூஞுண், tடஞுணூஞு டிண் ச் ண்தஞீஞீஞுண ஞிடச்ணஞ்ஞு டிண tடஞு தீச்தூ ண்ஞுடிண்ட்டிஞி தீச்திஞுண் tணூச்திஞுடூ. Oணஞு டுடிணஞீ ணிஞூ தீச்திஞு ஞிடச்ணஞ்ஞுண் ஞீடிணூஞுஞிtடிணிண ச்ணஞீ ச்ணணிtடஞுணூ ண்tணிணீண் ஞுணtடிணூஞுடூதூ. குணி tடஞுணூஞு ட்தண்t ஞஞு ச் ஞ்ணூஞுச்t ஞிடச்ணஞ்ஞு டிண tடஞு ட்ச்tஞுணூடிச்டூ ணிஞூ tடஞு ஞுச்ணூtட ச்t tடஞு ஞீஞுணீtட. ஏச்ட்டூதூண, கூஞுடூடூட்ஞுதீடதூ க.28) பூமியில் நில அதிர்வை ஏற்படுத்தி பல அழிவுகளை உண்டாக்கு கின்றன. அதே போல் மனித உடம்பினுள் உயிர்க் கதிரலை வீசப்படுகிறது. அது உலா வந்து கொண்டிருக்கும் பகுதிகளில் (உறுப்பு) காயமோ கத்தியோ பட்டால் அக்கதிர்கள் அப்புண்களின் வழியே வெளியேறிவிடும். அதனால், உயிர்க்கதிர் உடலிலிருந்து வெளி யேறினால் மரணம் ஏற்படுகிறது. இக்கதிருக்கு மருத்துவ நூல் வைத்த பெயரே அமுதநிலையாகும்.
இதனைக் கொண்டு பார்த்தால், வானவெளியாகிய அண்டத்திலும் பூமியாகிய பிண்டத்திலும் என்ன நிகழ்கிறதோ அதுவே, மனித உடம்பிலும் நிகழ்கிறது எனக் கண்டனர் போலும். இதன் முழு உண்மைகளையும் கண்டறிய அறிவியல் துறை அறிஞர்கள் ஆராய்ந்து அறிய வேண்டும்.

அறுவை சிகிச்சைக்குரிய காலம்

அறுவை சிகிச்சைக்குரிய காலம்
அறுவை சிகிச்சை என்பது மருத்துவ உலகின் மகத்தான சாதனை எனலாம். இதன் தொடக்கம் என்று ஏற்பட்டது என்பதை அறிய முடியாது. வேல்பட்ட புண்ணைத் தைக்கும் முறை326 நம் முன் னோர்கள் வகுத்த முறை என்பது தெரியவரும். அவ்வாறு புண் களையோ நோய்ப் பகுதிகளையோ நீக்கவோ, சரிசெய்யவோ செய்யப் படுகின்ற அறுவை மருத்துவத்தை எந்தெந்த நாளில் எந்தெந்தப் பகுதிகளில் செய்யக் கூடாது என்பதைக் கண்டறிந்துள்ளனர்.
அமாவாசை தொடங்கி பௌர்ணமி வரையிலும், பௌர்ணமி தொடங்கி அமாவாசை வரையிலும் மனித உடலில், ‘அமுத நிலைகள்’ சுழன்று கொண்டிருப்பதாகவும், அதன் சுழற்சியின் போது, ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு பகுதியிலும் நின்று செல்லும். அந்தப் பகுதி எது என்பதை அறிந்து,அந்த நாளில் அந்தப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்யாதிருப்பது நலமென்பர். அது மட்டுமல்ல, அந்த நாளில் அந்தப் பகுதியில் கொப்புளங்கள் ஏற்பட்டாலோ, குத்து வெட்டு போன்றவை ஏற்பட்டாலோ, பாம்பு, அட்டை, சிலந்தி போன்றவை கடித்தாலோ நோய் தீராமல் மரணம் ஏற்படும் என்றும், திதிகளை அறிந்து அறுவை சிகிச்சை செய்தால் நோய் நீங்குமென்றும் கூறப்படுகிறது.327 இவ்வாறான அமுத நிலைச் சக்கரம் ஒன்றை மதனநூல் உரைத்திடக் காணலாம். அந்தந்த திதிகளில் அந்தந்த நிலைகளில் அமுதம் நிற்கு மெனவும், அவ்விடத்தைத் தொட்டாலே இச்சை உச்ச நிலையை அடையுமெனவும், அந்த நிலைக்கு எட்டாமிடம் நஞ்செனவும், அவ்விடத்தைத் தொட்டால் இச்சையில் வெறுப்பு ஏற்படுமெனவும் கூறப்படும்.

காலமும் உணவும்

காலமும் உணவும்
உணவை எந்த முறையில் உண்ண வேண்டும். உணவின் அளவு, உணவுண்ணும் நேரம் முதலியவற்றை நன்கு அறிந்திருந்தனர் நம் முன்னோர். “உண்பது நாழி, உடுப்பவை இரண்டே“315 என்று பழந்தமிழ் மக்கள் கருதினர்.
“நுதல் வியர்க்கும் படியாக உணவை உண்டனர்“316 என்னும் செய்தியும் சங்க நூல்களில் காணப்படுகிறது.
"" விலாப்பக்கம் புடைக்கும் அளவிற்கு உணவுண்டனர்''317
என்பவற்றிலிருந்து உணவை எவ்வாறு உண்டனர் என்பது தெரியவரும். ஆனால், மருத்துவ நோலோர் மேற்கண்ட முறை யிலிருந்து மாறுபட்டிருக்கின்றனர்.
"" இரும்புறு பசியே யாகில்
இதயமே மலர்ந்து தோன்றும்
இரும்புறப் பசித்த ஊணும்
மிகுந்தஇன் பத்தைக் காட்டும்.''318
பசி உண்டான பின்னர் உண்ணும் உணவே உடலுக்கு இன்பத்தைத் தரவல்லதாகும் என்று கண்டனர்.
"" அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து.''319
முன்னர் உண்ட உணவு செரிப்புண்டானதை அறிந்தும், பின்னர் மிக்க பசி உண்டான பின்பும், உடலுக்கு எந்தவித ஒவ்வாமையையும் உண்டாக்காத உணவை அறிந்தும் உண்க என்றனர். அதுவே, ‘நெடிதுய்க்குமாறு’ 320 என்றதைப் போல, நீண்ட நாள் வாழ வழி வகுக்கும் என்று வாகட மறையோர் வகுத்த முறையாம்.
அதே போல், உணவை எத்தனை பொழுது உண்பது என்பதும் கேள்விக்குரியது. சராசரியாக நாளொன்றிற்கு மூன்று வேளையை விடவும் அதிகமாக உண்ணுபவர் உண்டு. என்ற போதிலும் மூன்று வேளை உணவு என்பதே முறையானது என்பது பொதுவான கருத் தாகும். ஆனாலும், மருத்துவ வல்லார் உரைப்பது வேறாக உள்ளது.
"" உண்பதே ஒருபொழு தாகில் உடலுக்கு உறுதி யாகும்
உண்பதே இருபோ தாகில் உயர்பெலம் எழுதாது எய்தும்
உண்பது மூன்று காலம் உண்டிடில் பிணிஉண் டாகும்
உண்பதும் இரண்டு காலம் உரைத்ததாம் உலகத் தோர்க்கே
உரைத்திடும் காலம் ஆறும் உயர்நிலம் ஐந்தும் ஒக்கும்
நெறியுறு காலம் தப்பா நேர்மையாய்ச் சமைத்த அன்னம்
நெறியுற உண்பார்க்கு இல்லை நீள்நிலம் மீதில் நோயே.''321
ஒரு வேளை உணவினால் உடலுக்கு உறுதியும், இருவேளை உண வினால் உடலுக்கு வலுவும் உண்டாகும். மூன்று வேளை உணவு உண்டால் நோயும் உண்டாகும். இது உலகத்தோர்க்கு உரைத்தது. ஆறு காலத் திலும் ஐவகை நிலத்திலும் வாழும் மக்கள் அனைவர்க்கும் இது பொருந்தும்.
இவ்வாறு காலமாறுபாடு இல்லாமல் குறித்த காலத்தில், முறை யாகச் சமைக்கப் பெற்ற உணவை உண்ணுகின்றவர்களுக்கு நோய் என்பதே வராது என்று வகுத்துரைக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
காலமும் கற்பமும்
சாகா நிலையை எய்துவதற்காகவும், நோயற்ற வாழ்விற்காகவும் மருத்துவ, ஞான நூல்கள் கற்பங்களைக் கூறியுள்ளன. அக்கற்பங்களை உண்பதற்கு நாள்கள் குறிக்கப்படுகின்றன. கற்பங்களைப் பௌர்ணமி நாளிலும், மூன்றாம் பிறை நாளிலும் உண்ண வேண்டும் என்பர்.322
காலமும் யோகமும்
யோக முறைகளைப் பின்பற்றிச் சித்த நிலையைப் பெற முயல் பவர்கள், எந்தெந்தக் காலங்களிலிருந்து தொடங்க வேண்டும் என்பதற்கு அரிய முறைகளைக் கூறக் காண்கிறோம்.
யோகிகள் தங்கள் செயல் ஆவணி, மார்கழி, ஐப்பசி, பங்குனி, வைகாசி, ஆடி, தை ஆகிய ஏழு மாதங்களில் தொடங்கினால் குற்ற மில்லை.
மேஷம், மீனம், கன்னி, அவிட்ட நட்சத்திரங்களும்
குரு, மதி, புகர், புந்தி ஆகிய இலக்கினங்களும்
மீனம், வில், துலை, கன்னி ஆகிய இராசிகளும்
பஞ்சமி, சஷ்டி, சத்தமி, தசமி, திருதிகை, சதுர்த்தி
ஆகிய திதிகளும் குருபூசை, சிவபூசை, தீட்ø
ஆகியவற்றுக்கு நல்ல நாள்களாகும் என்பர்.323
காலமும் நோயும்
நோயுற்றது எந்த நாள் என்பதை அறிந்தால், இயல்பாக எந்த நாளில் அந்த நோய் போகும் என்பதை அறிய விண்மீன்களைக் கொண்டும்324 திங்களைக் கொண்டும்325 அறிந்துள்ளனர். விண்மீன், திங்கள் ஆகியவற்றின் கதிர் இயக்கங்கள் மனித நோயின் ஆற்றலைக் குறைக்கவும் கூட்டவும் வல்லவை என்பது இதனால் பெறப்படும். இது, நாளோடும், கோளோடும் நோய்களுக்கும் மனித உடல் நலத்திற்கும் உள்ள தொடர்பு என்ன என்பதை அறிய வழிவகுக்கும் எனலாம்.

காலமும் மருந்தும்

காலமும் மருந்தும்
மருந்துகளைச் செய்ய எந்த எந்த மாதங்களில் எந்த எந்த மருந்துகளைச் செய்ய வேண்டுமென்று உரைக்கப் பெற்றுள்ளனவோ, அந்த அந்த மாதங்களில்தான் அந்த அந்த மருந்துகைளைச் செய்ய வேண்டுமென்று கட்டளை பிறப்பிக்கப் பட்டுள்ளதால் மாதங்களின் முக்கியத்துவம் விளங்குகிறது.
அதாவது, பங்குனி முதல் மாசி ஈறாக வரும் மாதங்கள் பன்னிரண்டில் இரண்டு இரண்டு மாதங்களாகப் பெரும் பொழுது காலத்தைக் கவனத்தில் கொண்டு, ஒவ்வொரு மருந்தை ஒவ்வொரு பொழுதில் முடித்திடுமாறு கூறப்படுகிறது.
பங்குனி, சித்திரை – குரு மருந்து; தை, மாசி – செயநீர்;
ஐப்பசி, கார்த்திகை – உருக்கு வகை; ஆடி, ஆவணி – திராவகம்;
வைகாசி ஆனி – சாரணை; புரட்டாசி, மார்கழி – செந்தூரம்;
ஆகியவை செய்திட வேண்டும். இதில் ஏதோனும் தவறுகள் நேர்ந்தால் செய்யும் மருந்து சரியான பாகமாக அமையாது. கவனமாகப் பார்த்துச் செய்யவும் என்ற கண்டிப்பும் காணப்படுகிறது. 311
காலமும் வெப்பமும்
இதனால், இயற்கையின் வெப்பமும், மருந்திற்குத் தேவைப்படும் வெப்பமும் ஆராயப்பட்டிருப்பது தெரிய வரும். இளவேனில் காலத்தில் செய்ய வேண்டிய குரு மருந்தைக் கூதிர் காலத்தில் செய்ய நேர்ந்தால், நூறு வறட்டிகளினால் இளவேனில் காலத்தில் கிடைக்கும் வெப்பத்தை விடவும் குறைவாகக் கூதிர் காலத்தில் கிடைக்கக் கூடும். காரணம், இயற்கையாகவே இளவேனில் காலமும் கூதிர் காலமும் வெப்பத்தால் வேறு வேறானவை. ஒரு மருந்து, வேதியல் முறையில் ஒரு மாற்றத்தைப் பெற வேண்டுமானால், குறிப்பிட்ட அளவு வெப்ப நிலையில் அம்மருந்து வைக்கப்பட்டால்தான் நிகழும் என்பதே அறிவியல் உண்மை. அத்தகைய வேதியல் மாற்றம் நிகழாமல் செய்யப்படும் மருந்து நோயைத் தீர்க்கக் கூடியதாக அமையாது. நோயின் தன்மையை மாற்றவும் கூடும். அவ்வாறானால் மருத்துவரின் நற்பெயர் கெட நேரிடும். காலம் கருதினால் அவ்வாறு நிகழாமல் போகலாம்.
காலமும் நாடியும்
எந்த நோயையும் நாடியின் துடிப்பு கொண்டு கண்டறிய முடியும். இந்நாடியைக் கணிக்க காலம் பார்த்தல் வேண்டும். இந்தெந்த மாதங்களில் தான் நாடியைப் பார்க்க வேண்டும் என்பது விதியாகக் கூறப்படுகிறது.
“ சித்திரை, வைகாசிவைகறை; கார்த்திகைநண்பகல்;
ஆனி, ஆடி, ஐப்பசி, மார்கழி, தை, மாசி மாலை;
பங்குனி, ஆவணி, புரட்டாசி இரவு'' 312
என்னும் நான்கு சிறுபொழுதுகளில் நாடி பார்க்க வேண்டும்.
இதில் குறிப்பிட்டுள்ள சிறுபொழுதுக்கும் இயற்கையின் வெப்பத்துக்கும் ஏற்ப நாடிகள் இயங்கும். சித்திரை, வைகாசி மாதங்களில் நண்பகலில் ஏன் நாடி பார்க்கக் கூடாது எனச் சிந்தித்தால் அதன் பொருள் விளங்கும்.
காலமும் மருத்துவனும்
மருந்துகளைச் செய்ய மாதத்தையும் பருவத்தையும் அறிந்து அதன் வழிச் சென்று, அதற்குரிய மருந்துகளைச் செய்து சேகரிக்கப் படுவதுடன், நோயாளியைக் கண்டவுடன் மருத்துவம் பார்ப்பதும் கூடாதென்பது கூறப்படும்.
"" நாள்களின் பேதம் பாரு நடவடி யின்ன தென்று
கோள்பாரு உச்சம் பாரு குணம்குறி வந்த குற்றம்
ஆள்பாரு நடக்கை பாரு அவரவர் செய்கை பாரு.''313
நோயாளியைக் காணுகின்ற நாளின் பேதா பேதங்கள்; கோள்களின் நிலை; அவற்றின் உச்சம்; அதனால் உண்டாகும் விளைவு; நோய்க்கும் காலத்துக்கும் உள்ள தொடர்பு; நோயாளிக்கும் கோள்களுக்கும் உள்ள நட்பு, பகை என்னும் உறவு; நோயாளிக்கு வந்த நோய்க்கு மருந்து தயாரிக்கும் காலம் என்பன கண்டறியப்பட்ட பின்பே, மருத்துவம் பார்க்க வேண்டும்.
"" நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்''
"" உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்''314
என்னும் குறள்களின் பொருள் மேற்கண்டவற்றை உறுதி செய்ய அரணாக அமைவது கருதத்தக்கது.

WELCOME